தங்காலை, ஹேனகடுவ பிரதேசத்தில் ஏற்பட்ட வாகன விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.

தங்காலையிலிருந்து திஸ்ஸமஹாராம நோக்கி நேற்று இரவு (31) சென்ற கார் ஒன்று வீதியை விட்டு விலகி ஆலமரத்தில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த விபத்தின் போது காரில் 05 பேர் பயணித்துள்ளதுடன் 29 மற்றும் 35 வயதுடைய ரன்ன பிரதேசத்தைச் சேர்ந்த இருவர்

மேலும், விபத்தில் காயமடைந்த கார் சாரதி மற்றும் ஏனைய இருவரும் தங்காலை வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை தங்காலை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.