கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தில், வரி செலுத்தப்படாத 03 கிலோவுக்கும் அதிகமான தங்கம் மற்றும் 39 ஐபோன் வகை கையடக்கத் தொலைபேசிகளுடன் இரு பெண்கள் உட்பட 06 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று அதிகாலை டுபாயில் இருந்து வந்த குறித்த பயணிகள் சுங்கப் பகுதியைக் கடந்து வருகை முனையத்தில் இருந்து வெளியே வந்தபோது விஷேட சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

இதன்போது , அவர்கள் உடமைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த தங்கம் மற்றும் கைத்தொலைபேசிகள் கண்டெடுக்கப்பட்டன. இந்தப் பொருட்களுடன் கைது செய்யப்பட்ட ஆண் சந்தேகநபர்கள் 45, 48, 50 மற்றும் 51 வயதுடையவர்கள் எனவும், பெண் சந்தேக நபர்கள் 40 மற்றும் 41 வயதுடையவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைதானவர்கள் அக்குறணை – நீர்கொழும்பு மற்றும் திருகோணமலை ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள் என கூறப்படும் நிலையில் , குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Von Admin