மத்திய மலைநாட்டில் பெய்து வரும் கடும் மழை காரணமாக மேல் கொத்மலை, காசல்ரீ, மவுஸ்ஸாக்கலை, லக்ஷபான உள்ளிட்ட பல நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளன.

நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் ரஞ்சித் அழககோன் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

மண்சரிவு காரணமாக சில வீதிகளின் போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.