யாழ்ப்பாணத்தில் இருந்து இந்தியாவுக்கு மீண்டும் விமான சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது.

இந்நிலையில் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சென்னை விமான நிலையம் வரை இந்த சேவை முன்னெடுக்கப்படும்.

அடுத்த வாரம் விமான சேவை ஆரம்பிக்கப்படும் என்று வடக்கு மாகாண பிரதம செயலாளர் எஸ்.எம்.சமன் பந்துலசேன தெரிவித்துள்ளார்.

இதேவேளை. பலாலி விமான நிலையத்தில் இருந்து இரத்தமலானை விமான நிலையத்திற்கும் விமான சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது.