எதிர்வரும் வாரங்களில் மரக்கறிகளின் விலைகள் அதிகரிக்க கூடும் என அகில இலங்கை பொருளாதார மத்திய நிலையங்களின் குழு தலைவர் அருண சாந்த ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

தற்போது நிலவும் மழையுடனான வானிலை காரணமாக விளைச்சல்கள் சேதமடைந்துள்ளமையினால் மரக்கறிகளின் விலை 40 முதல் 50 சதவீதத்தால் அதிகரிக்கக் கூடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.