சாவகச்சேரியில் கார் மோதி இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று (7) இரவு  10 மணியளவில் இந்த விபத்து நடந்தது.

சாவகச்சேரியில் இருந்து நுணாவில் நோக்கி இரண்டு இளைஞர்கள் துவிச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்தனர். இதன்போது, யாழ்ப்பாணம் நோக்கி சென்ற கார், நுணாவில் பொலிஸ் நிலையத்திற்கு அருகில், இளைஞர்களை பின்பக்கமாக மோதி தள்ளியது.

விபத்தை ஏற்படுத்திய கார் தப்பிச் சென்று விட்டது.

இதில், நுணாவிலை சேர்ந்த கந்தையா நிஷாந்தன் (27) என்ற இளைஞன் உயிரிழந்தார். மற்றைய இளைஞன் மயக்கமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

உயிரிழந்த இளைஞனின் சடலம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது

Von Admin