• Di. Dez 10th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர் புதிய சாதனை.

Aug 8, 2022

பண்டாரகம பகுதியில் இடம்பெற்ற தேசிய ரீதியான பளு தூக்கல் போட்டியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர் புதிய சாதனைகளை படைத்துள்ளார்.

25 மாவட்டங்களையும் சேர்ந்த 44 க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த போட்டியில் சற்குணராசா புசாந்தன் யாழ் மாவட்டத்தை தனி ஒருவராக பிரதிநிதித்துவம் செய்தார்.

மூன்று பிரிவுகளில் (330 கிலோ Squat, 175 கிலோ Bench press, 261 கிலோ) நடைபெற்ற மூன்று போட்டியிலும் வென்று மூன்று தங்க பதக்கங்களை வெற்றி கொண்டார்.

இந்த போட்டியில் டெட்லிப்ட் (Deadlift மற்றும்) ஸ்குவாட் (Squat) பிரிவில் புதிய சாதனையை நிலைநாட்டிய புசாந்தன், குறித்த போட்டியில் மட்டும் மொத்தமாக 766 கிலோ எடையை தூக்கியும் சாதனையை நிலைநாட்டியுள்ளார்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed