தனியார் துறையில் பணியாற்றும் பெண்கள் மாலை 6.00 மணிக்கு மேல் வேலை செய்யும் கடை மற்றும் அலுவலக பணியாளர்கள் சட்டத்தில் திருத்தம் செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 

இலத்திரனியல், கணினி மற்றும் தகவல் தொழிநுட்பத் துறையுடன் தொடர்புடைய நிறுவனங்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக  (09) நடைபெற்ற அமைச்சரவை செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர் தெரிவித்தார்.