• Di. Dez 10th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழ்.குப்பிழான் கற்கரைக் கற்பக விநாயகர் தேர்த் திருவிழா(10.08.2022)

Aug 11, 2022

யாழ்.குப்பிழான் கற்கரைக் கற்பக விநாயகர் ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் தேர்த் திருவிழா புதன்கிழமை(10.8.2022) வெகுசிறப்பாக இடம்பெற்றது.

காலை அபிஷேக பூசை, வசந்தமண்டபப் பூசை வழிபாடுகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து விநாயகப் பெருமான், வள்ளி- தெய்வயானை சமேத முருகப் பெருமான், சண்டேஸ்வரர் ஆகிய முத்தெய்வங்களும் திருநடனத்துடன் உள்வீதியில் எழுந்தருளி முத்தேர்களிலும் எழுந்தருளினர்.

சேந்தனார் அருளிய திருப்பல்லாண்டு ஓதப்பட்டு அடியவர்களால் சிதறுதேங்காய்கள் உடைக்கப்பட்டதைத் தொடர்ந்து அடியவர்களின் அரோகராக் கோஷம் முழங்க, வடம் தொட்டிழுக்க முற்பகல்-11 மணியளவில் முத்தேர் பவனி ஆரம்பமானது.

தேர்த் திருவிழாவை முன்னிட்டுப் பல ஆண் அடியவர்கள் அங்கப் பிரதட்சணை எடுத்தும், பறவைக் காவடிகள் எடுத்தும், பெண் அடியவர்கள் அடியளித்தும், கற்பூரச் சட்டிகள் எடுத்தும் தமது நேர்த்திக் கடன்களை நேர்த்தியுடன் நிறைவேற்றினர்.

முத்தேர்களும் இருப்பிடம் வந்தடைந்ததைத் தொடர்ந்து அடியவர்கள் அர்ச்சனை செய்து வழிபாடாற்றினர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed