பெல்ஜியம் நாட்டில் வசித்து வந்த நிலையில் யாழ் நபர் ஒருவர் நீரில் முழ்கி பலியாகியுள்ளதாக அந்நாட்டு செய்தி ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

இவர் யாழில் நாவற்குழி பகுதியைச்சேர்நதவர் என்றும் தற்போது பெல்ஜியம் நாட்டில் குடும்பத்தாருடன் வசித்து வந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்த நபர் குறித்த பகுதியைச்சேர்ந்த ரவி எனும் வல்லிபுரம் ரவிந்திராசா எனும் இரண்டு பிள்ளைகளின் தந்தை என தெரியவந்துள்ளது.

குடும்பத்தாருடன் அந்நாட்டில் நீராட சென்ற வேளையில் அவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணையை பெல்ஜியம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Von Admin