• Di. Dez 10th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

கோண்டாவில் பகுதியில் இளைஞன் ஒருவர் கைது

Aug 16, 2022

யாழ்ப்பாணம் – கோண்டாவில், வீரபத்திரர் கோவிலை அண்டிய பகுதியில் ஒரு தொகை போதை மாத்திரைகள், அவற்றை விற்பனை செய்து அதன்மூலம் பெற்றுக்கொண்ட பணத்துடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோப்பாய் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து, அவ்விடத்திற்கு விரைந்த பொலிஸார்  23 வயதான இளைஞனை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்த வேளை, அவரது உடமையில் இருந்து ஒரு தொகை போதை மாத்திரை, அவற்றை விற்பனை செய்ததன் மூலம் பெற்றுக்கொண்ட பணம் என்பவற்றை மீட்டனர்.

அதனை அடுத்து, கைது செய்யப்பட்ட இளைஞனை கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed