நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் அமைக்கப்பட்டுள்ள குபேர திக்கு ஶ்ரீ குமார வாசல் கோபுரத்தின் கலசாபிஷேகம் எதிர்வரும் 19 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

இது தொடர்பில் பொது மக்களுக்கு அறிவித்தலொன்றை நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.

இந்த அறிவித்தலில், கார்த்திகை மஹோற்சவத்தன்று காலை 6 மணி முதல் குபேர திக்கு ஶ்ரீ குமார வாசல் கோபுரத்தின் கலசாபிஷேகம் நடைபெறவுள்ளது.

கந்தப்பெருமான் எழுந்தருளி, உள்வீதி உலா வந்து குமார வாசலைத் திறந்ததும், கும்பாபிஷேகம் நடைபெற்றவுள்ளது.

இதன்போது பொது மக்கள் அனைவரும் வைரவ பெருமான் வாசல் வழியாக பழைய வாகனசாலை பாதையில் சென்று குமார வெளிப் பூந்தோட்டத்தின் ஊடாக தமது வழிப்பாடுகளை மேற்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.  

Von Admin