யாழில் தனிமையில் வாழ்ந்து வந்த பெண் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவமானது யாழ்.இணுவில் – மஞ்சத்தடி கொட்டடம்பனை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட பெண் 62 வயதான தெய்வேந்திரம் வசந்தி என்ற வயோதிப பெண் என தெரியவந்துள்ளது.

குறித்த வயோதிபப்பெண்ணின் பிள்ளைகள் வெளிநாட்டில் உள்ள நிலையில் மற்றொரு பிள்ளை வெளிமாவட்டத்தில் வசித்து வருவதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனால் தனிமையில் குறித்த பெண் வாழ்ந்து வந்ததால் அவருடைய இரு சகோதரர்கள் கண்கானித்து வந்துள்ளனர்.

வழமை போன்று வயோதிப பெண்ணின் வீட்டுக்கு சாப்பாடு கொடுக்க சென்றிருந்தபோது அவர் உயிரிழந்து காணப்பட்டுள்ளார்.

பின்னர் சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸாருக்க தகவல் வழங்கிய நிலையில் பொலிஸார் சடலத்தை மீட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.

Von Admin