• Di. Dez 3rd, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழில் பலரை வியக்க வைத்த பூப்புனித நீராட்டு விழா!

Aug 16, 2022

யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற மிக ஆடம்பரமான பூப்புனித நீராட்டு விழா பலரை வியக்க வைத்திருக்கின்றது.

காங்கேசன்துறை வீதி – பூநாரி மடத்தடியில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில் பூப்புனித நீராட்டு விழாவொன்று இடம்பெற ஏற்பாடாகியிருந்தது.

இதற்காக வண்ணார்பண்ணை நாச்சிமார் கோவில் பகுதியில் இருந்து நிகழ்வு மண்டபம் வரை காங்கேசன்துறை வீதி வழியாக யானை, குதிரை வண்டில், கதகளி,

மேளதாள வாத்தியங்கள், சகிதம் பெண் மற்றும் அவரது உறவினர்கள் பவனியாக மண்டபம் வரை அழைத்துவரப்பட்டனர்.

தென் பகுதியில் இருந்து யானை மற்றும் கதகளி கலைஞர்கள் கொண்டுவரப்பட்டு இந் நிகழ்வு இடம்பெற்றது.

இந் நிலையில் அதனை காண்பதற்காக பெருமளவு மக்கள் ஒன்றுகூடினர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed