• Mi.. März 19th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

மனிதர்களிடமிருந்து விலங்குகளுக்கு பரவும் குரங்கம்மை வைரஸ்

Aug. 19, 2022

ஆப்பிரிக்க நாடுகளில் பரவிய குரங்கமை வைரஸ் தொற்று இன்று உலகம் முழுவதும் 90-க்கும் மேற்பட்ட நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த குரங்கமை தொற்றினால் உலகம் முழுவதும் 35,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த குரங்கமை வைரஸ் தொற்றை உலக சுகாதார நிறுவனம் சர்வதேச சுகாதார நெருக்கடியாக அறிவித்துள்ளது.

இந்நிலையில் பாரிஸ் நகரத்தில் குரங்கமை வைரஸ் தொற்று மனிதரிடத்தில் இருந்து ஒரு நாய்க்கு பரவியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.‌ இதன் காரணமாக உலக சுகாதார அமைப்பு ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி குரங்கமை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் செல்ல பிராணிகள் மற்றும் விலங்குகளிடமிருந்து விலகி இருக்க வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed