• Do. Sep 12th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

ஐரோப்பிய நாடுகளில் பயங்கர புயல்!13 பேர் உயிரிழப்பு.

Aug 20, 2022

ஐரோப்பிய நாடுகளில் கடந்த ஜூன் மாத தொடக்கத்தில் இருந்து கடுமையான வெப்ப அலை வீசி வருகிறது.

பிரித்தானியா, பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகளில் வெப்ப அலைக்கு நூற்றுக்கணக்கானோர் பலியாகினர்.

பல நாடுகளில் வெப்பத்தின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மத்திய மற்றும் தெற்கு ஐரோப்பிய நாடுகளில் உருவான திடீர் புயல்கள் அந்த நாடுகளை புரட்டிப்போட்டன.

பிரான்ஸ், இத்தாலி மற்றும் ஆஸ்திரியா ஆகிய நாடுகளை பயங்கர புயல்கள் தாக்கின.

இந்த புயல்களால் அந்த நாடுகளில் உள்ள பல்வேறு நகரங்கள் சின்னாபின்னமாகின.

புயல்களால் ஆயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின்கம்பங்கள் சரிந்தன. புயல்களில் சிக்கி வீடுகள் உள்பட நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் சேதமடைந்தன.

புயல்களை தொடர்ந்து அந்த நாடுகளில் கனமழை வெளுத்து வாங்கியதால் அங்கு கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சாலைகள், சுரங்க ரெயில் நிலையங்கள் உள்ளிட்டவை வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

புயல், மழை காரணமாக மின்சாரம், தகவல் தொடர்பு மற்றும் சாலை போக்குவரத்து உள்ளிட்டவை துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.

இதனிடையே புயல்கள் தொடர்பான சம்பவங்களில் பிரான்ஸ் உள்ளிட்ட 3 நாடுகளில் சிறுவர்கள் உள்பட 13 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும் பலர் மாயமாகி உள்ளதாகவும், அவர்களின் கதி? என்ன என்பது என தெரியவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed