காங்கேசன்துறை கடற்படை முகாமில் கடமையாற்றும் கடற்படை சிப்பாய் ஒருவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

கேகாலையை சேர்ந்த டி.பி.என்.டி. பெரேரா(வயது 23) எனும் கடற்படை சிப்பாயே உயிரிழந்துள்ளார்.

குறித்த சிப்பாய் செவ்வாய்க்கிழமை காலை தனது துப்பாக்கியினால் தன்னைத் தானே சுட்டு தனது உயிரை மாய்த்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் காங்கேசன்துறை  காவல் துறைக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்  காவல் துறையினர்  விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Von Admin