சுவிற்சர்லாந்து – பேர்ன் அருள்மிகு ஞானலிங்கேச்சரத்தில் கொடியேற்றத்துடன் நற்செய்கை ஆண்டுத் திருவிழா 2022

18. 08. 2022 வியாழக்கிழமை முதல் 30. 08. 2022 செவ்வாய்க்கிழமை வரை திருவள்ளுவர் ஆண்டு 2053 (நற்செய்கை ஆண்டு) மடங்கற் திங்கள் 2ம் நாள் முதல் மடங்கற் திங்கள் 14ம் நாள் வரை அருள்மிகு ஞானாம்பிகை உடனாய ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் வீறியெழல் (சர்வாரி) ஆண்டுத் திருவிழா கொடியேற்றத்துடன் பெருவிழாவாக மிகு சிறப்புடன் நடைபெற எம்பெருமானின் பெரும் அருள் நிறைவாகக் கைகூடியுள்ளது. 

தெய்வத்தமிழில் வண்டமிழ்ச் சடங்குகள் ஆற்றி எம்பெருமான் இன்பத்திருச்செவிகள் குளிர நடைபெறும்.