அந்தியேட்டி வீட்டுக்கிருத்திய

அழைப்பிதழ்

அன்புடையீர்!

கடந்த 04-08-2022 வியாழக்கிழமை அன்று சிவபதமடைந்த அமரர் கணபதிப்பிள்ளை கோடீஸ்வரன் அவர்களின் அந்தியேட்டிக் கிரியைகள் எதிர்வரும் 02.09.2022 வெள்ளிக்கிழமை காலை 8.00 மணியளவில் கீரிமலை புனித தீர்த்தக்கரையிலும், வீட்டுக்கிருத்தியக் கிரியைகள் 03-09-2022 சனிக்கிழமை பகல் 12.00 மணியளவில் அன்னாரது இல்லத்திலும் நடைபெறும். அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்ப சகிதம் வருகை தந்து அன்னாரது ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும் தொடர்ந்து நடைபெறும் மதிய போசனத்திலும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம். சிறுப்பிட்டி மேற்கு, நன்றி

இங்ஙனம், நீர்வேலி.

குடும்பத்தினர்

கஜானந், இணுவில்.

கீதாசாரம் கே

அந்தியேட்டி வீட்டுக்கிருத்திய அழைப்பிதழ்

எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும். உன்னுடையது எதை இழந்தாய்? எதற்காக நீ அழுகிறாய்? எதை நீ கொண்டு வந்தாய், அதை நீ இழப்பதற்கு? எதை நீ படைத்திருந்தாய், அது வீணாகுவதற்கு? எதை நீ எடுத்துக்கொண்டாயோ, இது இங்கிருந்தே எடுக்கப்பட்டது. எதைக் கொடுத்தாயோ, அது இங்கேயே கொடுக்கப்பட்டது. எது இன்று உன்னுடையதோ, அது நாளை மற்றொருவருடையதாகிறது. மற்றொரு நாள், அது வேறொருவருடையதாகும்.

இதுவே உலக நியதியும் எனது படைப்பின் சாராம்சமுமாகும்.

– பகவான் ஸ்ரீ கிருஷ்ண ர்.