தொண்டைமானாற்றில் முதலைகள் இருப்பது அவதானிக்கப்பட்டுள்ளமையால் தொண்டைமானாற்றில் நீராடுபவர்கள் அவதானமாக நீராடுமாறு சந்நிதியான் ஆலய நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர்.

வரலாற்று பிரசித்தி பெற்ற செல்வச் சன்னதி ஆலய வருடாந்த மகோற்சவம் ஆரம்பமாகி வெகு விமர்சையாக இடம் பெற்று வரும் நிலையில் அதிகளவு பக்தர்கள் முருகப்பெருமானை தரிசிக்க நாட்டின் பல பாகங்களிலிருந்து வருகை தந்துள்ள நிலையில் செல்வச் சந்நிதி ஆலயத்தின் பின்புறம் உள்ள ஆற்றில் நீராடும் அடியவர்களை அவதானமாக நீராடுமாறு செல்வச் சந்நிதி ஆலய நிர்வாகத்தினர்அறிவித்துள்ளனர்,

ஆற்றில் முதலைகள் இருப்பது தொடர்பில் தகவல் வந்துள்ளதன் காரணமாக ஆற்றில் நீராடும் போது ஆழமான பகுதிகளுக்கு சென்று நீராட வேண்டாம் என முருகன் அடியவர்களை கேட்டு கொள்வதோடு ஆற்றில் போடப்பட்டுள்ள மிதப்பு எல்லைகளுக்கு உள்ளேயும் அதேபோல் மிக அவதானமாகவும் நின்று உதவிக்கு ஆட்களுடன் நின்று மேற்பார்வை செய்து நீராடுமாறு கேட்டுக்கொள்கின்றோம் மிக மிக அவதானமாக நீராடுவதை கருத்தில் கொள்ளுமாறு சந்நிதியான் முருக பக்தர்களைஙமன்றாட்டமாக கேட்டுக்கொள்கின்றோம்என அறிவித்துள்ளனர்,

Von Admin