கனடாவில் கூட்டாட்சி அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட திட்டத்தின் மூலம் நிரந்தர குடியுரிமைக்கான புதிய விண்ணப்ப வழியைப் பெற முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நடைமுறையானது கனடாவில் வசிக்கும் ஆவணமற்ற தொழிலாளர்களுக்கு நிரந்தர குடியுரிமையை பெற்றுக்கொள்ள சிறந்த நடைமுறையாக இருக்கும் என கருதப்படுகின்றது.

கனடாவில் கிட்டத்தட்ட 500,000 ஆவணமற்ற குடியிருப்பாளர்கள் வாழ்கின்றனர் என்றும் அவர்களில் பெரும்பாலானோர் கட்டுமானம், சுத்தம் செய்தல், பராமரிப்பு மற்றும் விவசாயம் போன்ற வேலைகளில் ஈடுபட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

குடிவரவு அமைச்சருக்கு  ஆணைக் கடிதம்

ஆவணமற்ற குடியிருப்பாளர்கள் சமூக தனிமைப்படுத்தல் மற்றும் தவறான வேலை நிலைமைகளால் ஏற்படும் மோசமான மன மற்றும் உடல் ஆரோக்கியம் உட்பட பலவிதமான பாதிப்புகளை எதிர்கொள்கின்றனர்.

கனடாவில் ஆவணமற்ற தொழிலாளர்கள் நிரந்தர அந்தஸ்தைப் பெறுவதற்கு இப்போது இந்த புதிய திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக நிரந்தகுடியுரிமை பெறும் தொழிலாளர்களுக்கு இது பாரிய திருப்புமுனையாக அமையும் என குறிப்பிடப்பட்டுள்ளது.