• Do. Sep 12th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு 

Sep 5, 2022

2022ஆம் ஆண்டுக்கான இரண்டாவது தவணை கல்வி நடவடிக்கைகள் செப்டம்பர் மாதம் 13 ஆம் திகதி ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

2022 ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் செப்டம்பர் மாதம் 07 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதேவேளை, தேசிய பாடசாலைகளில் இடைநிலை வகுப்புக்களுக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் செப்டம்பர் மாதம் 02 ஆம் திகதியின் பின்னர் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், சமர்பிக்கப்பட்டுள்ள மேன்முறையீடுகள் மற்றும் விண்ணப்பங்கள் தொடர்பான விடயங்கள் பாடசாலைகளில் உள்ள வெற்றிடங்கள் மற்றும் விண்ணப்பதாரிகளின் கோரிக்கைகளுக்கு அமைய பரிசீலனை செய்து அதற்கான தீர்மானங்கள், எதிர்வரும் காலங்களில் அறிவிக்கப்படும் என்றும் கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. 

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed