• Do. Sep 12th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

மானிப்பாயில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டுத் தாக்குதல்

Sep 6, 2022

யாழ்ப்பாணம், மானிப்பாய் காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் நேற்றையதினம் வன்முறைக்கும்பல் ஒன்று அட்டகாசும் புரிந்துள்ளது .

மானிப்பாய் கிறீன் மெமோறியல் வைத்தியசாலையின் பின்புற வீதியில் அமைந்துள்ள வீடொன்றினுள் நான்கு உந்துருளிகளில் வருகைதந்த வன்முறைக் கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியுள்ளது.

அத்துமீறி வீட்டினுள் புகுந்து வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு ஹயஸ் ரக வாகனங்களை அடித்து சேதப்படுத்தியதோடு, வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளையும் அடித்து நொருக்கி, வீட்டின் முன்புற கதவின் தகரத்தின் மீதும் வாளால் வெட்டிய நிலையில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டுத் தாக்குதலும் நடத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளனர் .

இந்நிலையில் வீட்டில் இருந்தவர்களுக்கு எதுவித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இது குறித்து மானிப்பாய் காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்த நிலையில் மானிப்பாய் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed