யாழ்ப்பாணம் பந்தத்தரிப்பு பகுதியில் திருமண வீடொன்றுக்கு சென்று கொண்டிருந்த கார் விபத்துக்குள்ளான சம்பவம் உறவினர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இன்று காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. திருமண மண்டபத்திற்கு மணமகளை ஏற்றிச் சென்ற கார் விபத்துக்குள்ளானது.

கார் சாலையை விட்டு விலகி மின்கம்பத்தில் மோதியது. எனினும் காரில் இருந்தவர்களுக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை என்றும், ஆனால் கார் பலத்த சேதம் அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து, மற்றொரு வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டு, மணமகள் மற்றும் அவரது உறவினர்கள் மண்டபத்தை அடையும் வரை சாலையில் நின்றனர்.