ஈழத்தின் பிரசித்தி பெற்ற தொண்டைமனாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் தேர்த்திருவிழா இன்று மிகவும் பக்தி பூர்வமாக இடம் பெற்றது.

ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ முருகப் பெருமான் தேரில் ஆரோகணித்து அடியவர்களுக்கு அருள் பாலித்தார்.

பலநூற்றுக்கணக்கான அடியவர்கள் அங்கப் பிரதட்சணம் செய்தும், அடியழித்தும் தங்கள் நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர். பல்வேறு காவடிகளும் கந்தனை நோக்கி வந்த வண்ணமிருந்தன.

செல்வச்சந்நிதி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் கடந்த மாதம் 27ம் திகதி சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

நாளை சனிக்கிழமை காலை 9 மணிக்கு தீர்த்தத் திருவிழாவும் நாளை மாலை 6 மணிக்கு மௌனத் திருவிழாவும் செப்டம்பர் 11ம் திகதி பூக்காரர் பூசையும் இடம்பெறவுள்ளது.

Von Admin