• Sa. Jul 27th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

வெள்ளவத்தை கடற்பகுதிக்கு செல்பவர்களுக்கு விடுக்கப்பட்ட‌ எச்சரிக்கை

Sep 12, 2022

வெள்ளவத்தை கடற்பகுதியில் 40 முதலைகள் சுற்றி திரிவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கின்ரோஸ் உயிர்காக்கும் நிறுவனத்தில் பணிபுரியும் திவங்க பெர்னாண்டோ என்பவர் வெள்ளவத்தை கடலில் நீராடும் போது முதலை குட்டியொன்றை பிடித்துள்ளார்.

குறித்த முதலைக் குட்டியை வனவிலங்கு அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளார்.

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது, சவோய் சினிமாவிற்கு அருகில் உள்ள கால்வாயில் நான்கு பெரிய முதலைகளை அவதானிக்கப்பட்ட நிலையில், வெள்ளவத்தை கடற்பகுதியில் 40 முதலைகளை கண்டுபிடித்துள்ளனர்.

இந்த முதலை அச்சுறுத்தல் குறித்து கின்ரோஸ் உயிர்காப்பு நிறுவனம் வனவிலங்கு அதிகாரிகளிடம் தெரிவித்தும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. இதனால் கடலில் குளிப்பதும் ஆபத்தாக மாறியுள்ளது.

கடந்த வருடம் தெஹிவளையில் மீனவர் ஒருவர் முதலையால் தாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடலில் குளிக்க செல்லும் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed