• Do. Sep 12th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

ஆல்ப்ஸ் மலையில் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்திய நிகழ்வு!

Sep 13, 2022

சுவிட்ஸர்லந்தின் ஆல்ப்ஸ் மலையில் இரண்டு பனியோடைகளுக்கு இடையே மலைப் பாதையொன்று வெளிப்பட்டுள்ளமை ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் ஈராயிரம் ஆண்டுகளில் இவ்வாறு அது வெளிப்படுவது இதுவே முதன்முறை என கூறப்படுகின்றது.

இதுவரை இல்லாத கடுமையான கோடைக்காலத்தால் பனி உருகி அந்தப் பாதை வெளிப்பட்டது.

கடந்த குளிர்காலத்தில் ஆல்ப்ஸ் மலையில் குறைவான பனிப்பொழிவே இருந்தது. எனினும் அங்கு முன்கூட்டியே தொடங்கிய கோடைக்காலத்தில் கடுமையான அனல்காற்று வீசியது.

அதனால் இந்த ஆண்டு, 10 ஆண்டுச் சராசரியைக் காட்டிலும் மூன்று மடங்கு பனி உருகி 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஆக அதிகமான பனி அங்கே உருகுவதாகப் புதிய புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

அதேவேளை பொதுவாக ஆல்ப்ஸ் மலையின் இந்தப் பகுதியில் கடல் மட்டத்துக்கு 2,800 மீட்டருக்கு மேற்பட்ட உயரத்தில் பனி படர்ந்திருக்கும். இவ்வாறான நிலையில் இரண்டு பனியோடைகளுக்கு இடையிலுள்ள பாதை இந்த மாத இறுதிக்குள் முழுமையாக வெளியே தெரியக்கூடும்.  

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed