யாழில் பூட்டியிருந்த வீட்டில் 16 பவுண் தங்க நகைகளை கொள்ளையடித்துச்சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவமானது யாழ்.வல்வெட்டித்துறை பகுதியில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியில் உள்ள வீட்டார் சம்பவத்தினம் அன்று மாலையளவில் வீட்டை விட்டு வெளியில் சென்ற வேளையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இக்கொள்ளைச்சம்பவத்தில் 11 பவுண் தாலிக்கொடி, 5 பவுண் காப்பு மற்றும் 19 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியன திருட்டுப்போயுள்ளதாக பொலிஸாரிடம் வீட்டின் உரிமையாளர் பொலிஸாரிடம் முறையிட்டுள்ளார்.

கொள்ளையன் வீட்டின் மதில் மூலம் ஏறி வீட்டின் பின் கதவை திறந்து கொள்ளையடித்துவிட்டு மீண்டும் அந்த கதவை பூட்டிச்சென்றுள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் இது குறித்தான மேலதிக விசாரணைகளை வல்வெட்டித்துறை பொலிஸ் தடயவியல் பிரிவு முன்னெடுத்துவருகின்றனர்.

Von Admin