யாழ். கலட்டி பகுதியில் ஆசிரியரான காதலி அவரது காதலன் கண்டித்ததினால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் இன்று (13-09-2022) காலை 11 மணியளவில் இடம் பெற்றுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் 24 வயதான சிவகுமாரன் நிருத்திகா என யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த ஆசிரியர், தனது காதலனுக்கு தெரியாமல் நேற்றைய தினம் நண்பி ஒருவரின் திருமண வீட்டுக்கு சென்றுள்ளார்.

காதலன் பலதடவை தொலைபேசி அழைப்பு எடுத்திருந்த போதும் அவர் தொலைபேசி அழைப்புக்கு பதிலளிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் குறித்த பெண் திருமண வீட்டுக்கு சென்ற சம்பவத்தினை தெரிவித்துள்ளார்.

ஆத்திரமடைந்த காதலன் ஒரு வாரத்துக்கு வீட்டை விட்டு வெளியில் செல்லக்கூடாது என கண்டித்துள்ளார்.

இதனால் மனவிரக்தி அடைந்த காதலி இன்றைய தினம் தவறான முடிவு எடுத்து உயிரிழந்துள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.