யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆடியபாதம் வீதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையமொன்றில் இன்று புதன்கிழமை காலை கும்பலொன்று கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது.
வணிக நிலையத்தின் கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்து ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள அரிசி மூடை, பனை பாக்ஸ் வகைகள், கோதுமை மாவு, எண்ணெய், பிஸ்கட் போன்றவற்றை கொள்ளையடித்து சென்றனர்.
அருகில் உள்ள வர்த்தக நிலையத்தின் சிசிடிவி காட்சிகளில் கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களை மோட்டார் சைக்கிள்களில் எடுத்துச் செல்வது தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து, முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.