ஒரு நாள் மற்றும் சாதாரண சேவைகளின் கீழ் கடவுச்சீட்டைப் பெறுவதற்கு திகதி மற்றும் நேரங்களை முன்பதிவு செய்துள்ள விண்ணப்பதாரர்களுக்கு மாத்திரமே இந்த சேவை வழங்கப்படுவதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

தலைமை அலுவலகம் மற்றும் பிராந்திய அலுவலகங்கள் ஊடாக தமது சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும் என குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், இன்று தேசிய துக்க தினம் என்பதால், திணைக்களத்தினால் வழங்கப்படும் ஏனைய சேவைகள் எதுவும் இடம்பெறாது என திணைக்களம் தெரிவித்துள்ளது.

Von Admin