• Mo. Sep 16th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

கனடாவில் வீடு வாங்கிய தம்பதிக்கு காத்திருந்த அதிர்ச்சி.

Sep 20, 2022

னடாவில் வீடு ஒன்றை கொள்வனவு செய்த தம்பதியினருக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. வீட்டை நேரில் சென்று பார்வையிடாது கொள்வனவு செய்துள்ளனர்.

ஒன்றாரியோவைச் சேர்ந்த தம்பதியினரே இவ்வாறு வீட்டை கொள்வனவு செய்துள்ளனர்.

கொள்வனவின் பின்னர் வீட்டை நேரில் சென்று பார்வையிட்ட போது வீட்டின் சமையலறையில் காளான்கள் முளைத்திருந்ததுடன், வீட்டை கூரைப் பகுதி உடைந்திருந்தது எனவும், கழிவறை பழுதடைந்திருந்தது எனவும் தெரிவிக்கின்றனர்.

மேகன் டேராச் மற்றும் அவரது கணவர் குறித்த வீட்டை 500,000 டொலர்களுக்கு கொள்வனவு செய்திருந்தனர். ஒன்றாரியோவின் கிராப்டோன் மேற்கு பகுதியில் இந்த வீடு அமைந்துள்ளது.

20 வீடுகளை பார்வையிட்டதாகவும் அதன் பின்னர் இந்த வீட்டை கொள்வனவு செய்ததாகவும் குறித்த தம்பதியினர் தெரிவிக்கின்றனர்.

நான்கு படுக்கை அறைகளைக்கொண்ட வீட்டில் பல்வேறு குறைபாடுகள் காணப்படுவதாகத் தெரிவிக்கின்றனர்.

குறித்த வீடு 1987ம் ஆண்டில் நிர்மானிக்கப்பட்டுள்ளது என குறிப்பிடுகின்றனர்.

எவ்வளவு தொகை செலவிட்டு வீடு கொள்வனவு செய்தாலும் வீட்டை உரிய முறையில் பரிசோதனையிட வேண்டியது அவசியமானது என தெரிவிக்கின்றனர்.

வீடு ஒன்றை பரிசோதனையிடுவதற்கு சுமார் 450 முதல் 600 டொலர்கள் வரையில் செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed