• Mi. Sep 11th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

மலிபன் பிஸ்கட் நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பால் மகிழ்ச்சியில் மக்கள்

Sep 20, 2022

மெலிபன் பிஸ்கட் நிறுவனம் தனது நிறுவனம் தயாரிக்கும் பல பொருட்களின் விலையை குறைத்துள்ளதாக அறிவித்துள்ளமை மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில மாதங்களாக நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமை காரணமாக உற்பத்திச் செலவு அதிகரித்ததன் காரணமாக பிஸ்கட் விலை அதிகரிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது , பல பொருட்களின் விலை குறைந்துள்ளதால் பிஸ்கட் விலை குறைக்கப்பட்டுள்ளதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர். மெலிபன் பிஸ்கட் நிறுவனம் விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ளது.

சமீபகாலமாக பிஸ்கட் விலை அதிகரித்துள்ளதால், ந்நாட்டின் முக்கிய பிஸ்கட் நிறுவனங்கள் செய்தியாளர் சந்திப்புகளை நடத்தி பிஸ்கட் வாங்குமாறு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன், மக்கள் அவற்றினை வாங்காதுவிட்டால் தங்களது நிறுவனங்கள் மூடப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed