• Sa.. Feb. 15th, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

கொலையில் முடிந்த கொள்ளை சம்பவம்

Sep. 21, 2022

கம்பஹா, அகரவிதவில் நேற்று இரவு இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்தின் போது 30 வயதுடைய நபர் ஒருவர் வாள்வெட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

வீதியில் நடந்து சென்ற பெண்ணின் பையை திருட முற்பட்ட போது மோட்டார் சைக்கிளில் வந்த ஆணும் பெண்ணும் வாகனத்தில் இருந்து கீழே விழுந்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு அருகில் உள்ள வீடொன்றில் வசித்த இருவர் சந்தேகத்திற்கிடமான பெண்ணை பிடிக்க முற்பட்ட போது மோட்டார் சைக்கிளில் வந்த நபர் அவர்களை கத்தியால் குத்திவிட்டு பெண்ணை விடுவித்து விட்டு தப்பிச் சென்றுள்ளார்.

காயமடைந்த இருவரும் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை கம்பஹா பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed