நேற்று (20-09-2022) இரவு யாழில் இரண்டு வாள்களுடன் இரண்டு இளைஞர்கள் மானிப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

மானிப்பாய் கடையொன்றில் பணிபுரிந்த இளைஞன் மீது அண்மையில் மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டுத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் அவர்களை மல்லாகம் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.