• Do.. Mai 1st, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

அத்தியாவசிய பொருட்கலளின் விலை குறைப்பு!

Sep. 23, 2022

லங்கா சதொச நிறுவனம் ஐந்து அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளை குறைக்கத் தீர்மானித்துள்ளது.  

நேற்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.  

அதன்படி, நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து லங்கா சதொச விற்பனை நிலையங்களிலும் இந்த பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு பெற்றுக்கொள்ள முடியும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.  

இதன்படி, இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ பெரிய வெங்காயம் 25 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.

இதன் முந்தைய விலை ரூ.175, புதிய விலை ரூ.150 ஆகும். 

இதேவேளை, ஒரு கிலோ வெள்ளை சீனி 7 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 278 ரூபாவாகும்.

முன்னதாக ஒரு கிலோ வெள்ளை சீனி 285 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. 

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed