• Sa.. Feb. 15th, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

உயிர் பிரியும் தருணத்தில் இளைஞரொருவரின் நெகிழ்ச்சியான செயல் !

Sep. 24, 2022

அரலகங்வில கல்தலாவ பிரதேசத்தில் வசித்து வந்த ருவன் சந்தன என்ற 31 வயதுடைய திருமணமான இளைஞன் கடந்த 19ஆம் திகதி இரவு திடீரென விபத்தில் சிக்கி பொலன்னறுவை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தலையில் பலத்த காயங்களுடன் அனுமதிக்கப்பட்ட அவர் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகள் குறைவு என மருத்துவமனை தெரிவித்துள்ளது.

இரண்டு நாட்கள் தீவிர சிகிச்சைக்குப் பிறகு, அவரது மூளை இறந்துவிட்டது என்று மருத்துவர்கள் கண்டறிந்தனர்.

இந்நிலையில் மேலும் 3 பேரின் உடல்நிலையை அவரது சிறுநீரகம் மற்றும் கல்லீரலால் பாதுகாக்க முடியும் என மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளதுடன், இளைஞரின் குடும்பத்தினரிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.

குடும்பத்தாரின் அனுமதியுடன் விசேட வைத்திய நிபுணர்களின் உதவியுடன் மேற்படி இளைஞரின் சிறுநீரகம் மற்றும் கல்லீரலை பெற்று மேலும் மூவரின் உயிரைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed