கொழும்பு காலி முகத்திடல் பகுதியில் உள்ள கடல் பகுதியில் திடீரென ஒளி ஒன்று தோன்றிய நிலையில் அது குறித்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

இந்நிலையில் பயோலுமினென்சென்ஸ் எனப்படும் ஒரு உயிரினத்தால் ஒளியின் உற்பத்தி மற்றும் உமிழ்வு நிகழ்வே இந்த மாற்றத்திற்கு காரணம் என தெரியவந்துள்ளது.

காலிமுகத்திடலுக்கு செல்லும் பொதுமக்கள் இந்த அரிய சந்தர்ப்பத்தை பார்வையிடுவதற்கான சந்தரப்பத்தை பெறுவார்கள் என இது தொடர்பான காட்சிகளை பகிர்ந்து கொண்ட இலங்கை கடல்வாழ் உயிரியலாளர் ஆஷா டி வோஸ் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் நீரின் மேற்பரப்பில் அடர்த்தியான அடுக்குகளில் Dinoflagellates பூக்கின்றன, அவை பகல் நேரத்தில் கடலில் சிவப்பு மற்றும் பழுப்பு நிறத்தையும் இரவில் அவை அலைகளில் பயணம் செய்யும் போது பிரகாசமான, நீல நிறத்தையும் தருவதாக தெரிவிக்கப்படுகிறது.   

Von Admin