• Mo. Sep 16th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

ஸ்ரீவல்லிபுர ஆழ்வார் இன்று கொடியேற்றம்

Sep 24, 2022

வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ். வடமராட்சி ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் இன்று சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.

ஒக்டோபர் முதலாம் திகதி குருக்கட்டு விநாயகர் தரிசனமும், 2ஆம் திகதி வெண்ணெய்த் திருவிழாவும், 3ஆம் திகதி துகில் திருவிழாவும், 4ஆம் திகதி பாம்புத் திருவிழாவும், 5ஆம் திகதி கம்சன் போர்த்திருவிழாவும், 7ஆம் திகதி சப்பறத் திருவிழாவும், 8ஆம் திகதி தேர்த் திருவிழாவும், 9ஆம் திகதி சமுத்திரத் தீர்த்தோற்சவமும் இடம்பெறவுள்ளன.

ஒக்டோபர் 10ஆம் திகதி கேணித் திருவிழாவும் மாலை கொடியிறக்கமும் இடம்பெறவுள்ளது. பெருந்திருவிழாவை சுகாதார விதிகளின்படி நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed