முச்சகிர வண்டி சாரதி மீது தவளை பாய்ந்ததில் அவர் உயிரிழந்துள்ளார். அவரது மனைவி படுகாயமடைந்தார்.

உயிரிழந்தவர் அத்தனகல்ல மீகல்ல பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட அபேகோன் முதியன்சேகே ஜயந்த பத்ம குமார (58) என அடையாளம் காணப்பட்டவர்.

கிரிந்திவெல – நிட்டம்புவ பிரதான வீதியின் தியகொடெல்ல என்ற இடத்தில் கடந்த புதன்கிழமை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. முச்சக்கர வண்டி சாரதி மீது தவளை பாய்ந்ததில், அவர் திடுக்கிட்டு, நிலைதடுமாறியதில் விபத்து நேர்ற்தது.

இந்த விபத்துடன் முச்சக்கரவண்டிக்கு பின்னால் பயணித்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதியுள்ளன.

இந்த மோதல்களில் காயமடைந்த இரண்டு இளைஞர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்த சாரதியின் மனைவி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Von Admin