தமிழாலும் இசையாலும் பக்தியை வளர்க்க நல்லூரில் நாள்தோறும் தேவாரமும் பொழிப்பும்; விஜயதசமியன்று ஆரம்பம்

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் தினமும் தேவாரம் மற்றும் பொழிப்பு திருப்பணி எதிர்வரும் விஜயதசமி அன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.

தினமும் மாலை 5 பூஜை தொடர்ந்து வழிபாடுகளை “ நல்லூரில் நாளுக்கோர் தேவாரம்“ என்ற இந்த திருப்பணி முன்னேடுக்கப்படவுள்ளது.

தினமும் ஒரு தேவாரம் ஓதி பொழிப்பும் வழங்கப்படும்.

தமிழாலும் இசையாலும் பக்தியை வளர்ப்தற்கான நோக்கமாக இந்த திருப்பணி முன்னெடுக்கப்படவுள்ளது.

ஓதுவார் தேவாரம் ஓதி பொழிப்பு சொல்லும்வரை  ஆலயத்தில் வழிபட வருகை தந்த, அடியவர்களும் அமர்ந்திருந்து செவிசாய்க்க வேண்டும் என்ற நடைமுறையும் பின்பற்றப்படவுள்ளது.

Von Admin