• Mo. Sep 16th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பூநகரி பாலத்தால் தனியே செல்வோருக்கான அபாய அறிவித்தல்

Sep 27, 2022

பூநகரி – பரந்தன் பாதையில் செல்வோர் மிகுந்த அவதானத்துடன் செல்லுங்கள். ஆட்கள் நடமாற்றம் குறைந்த இந்த பாதையில் வழிப்பறிகள் நடக்கின்றன.

குடமுருட்டி பாலத்திற்கு அருகில், பைக்கொன்றில் நின்றிருந்த இரண்டு பேரில் ஒருவர் வீதியின் குறுக்கே வந்து, மறிக்க முற்பட்டார். இவர்களின் செயல்கள் பற்றி முன்னமே அறிந்திருந்தபடியால், மோட்டார் சைக்கிளின் வேகத்தை அதிகரித்துக் கொண்டு அவர்களைக் கடக்க முற்படுகையில், அவர்கள் குறுக்கே வரவே கைகளில் அடிபட்டு, ஒருவாறு தப்பிக்க முடிந்தது.

தனியாக சென்றால் மறித்தால் நிற்காதீர்கள். அதன் பிறகு பாடு அவ்வளவு தான்.

பரந்தன் செல்லாமல், குறுக்காக கரடிப்போக் சந்தியை அடையும் வீதியில், இதற்கு முன்னரும் பெண்ணொருவரை மறித்து, இரண்டு பேர் தாக்கி உடமைகளை பறிக்க முற்படுகையில், தூரத்தே பிறிதொரு வாகனம் வரவே, வயல் வழியே ஓடிமறைந்துள்ளனர்.

இந்த வீதியில் வாழ்வாதாரத்துக்காக பாலைப்பழம், ஈச்சம்பழம், கயூ பழம், நாவல் பழம் என விற்பனை செய்பவர்கள், அதிகளவானவர் வீதியில் நின்று மறித்து விற்பனை செய்து வந்தனர்.

அந்த பாவப்பட்டவர்களின் வியாபாரத்திலும், இந்த வழிப்பறிகள் மண் அள்ளிக் கொட்டப்போகின்றனர். இவ்வாறு செய்தால், அவர்களின் வியாபாரம் நடக்காமல் போய்விடப்போகின்றது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed