இந்தியாவிற்கு யாழ்.சர்வதேச விமான நிலையத்திலிருந்து குறைந்த கட்டணத்தில் விமான சேவையை விரைவில் தொடங்க ஃபிட்ஸ் ஏர் (FitsAir) நிறுவனம் நம்பிக்கை கொண்டுள்ளதாக அதன் துணைத் தலைவர் பீட்டர் ஹில் தெரிவித்துள்ளார்.

குறைந்த கட்டண விமான நிறுவனமான ஃபிட்ஸ் ஏர் (FitsAir) கொழும்பில் இருந்து டுபாய், மாலி மற்றும் திருச்சிக்கு சர்வதேச விமானங்களை ஒக்டோபர் முதல் தொடங்குவதாக அறிவித்துள்ளது.

இந்தச் சேவைகளில் ஏ320 – 200 ரக விமானங்கள் பயன்படுத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கடந்த 23 நாடாளுமன்றத்தில் பேசிய சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்துடன் சேவையை நடத்த விரும்பும் இந்தியாவின் விமான நிறுவனங்களுக்கு அரசாங்கம் சலுகைகளை வழங்குகின்றது.

ஆனால், சேவையை வழங்க இந்திய விமான நிறுவனங்கள் தான் ஆர்வம் காட்டவில்லை என்று தெரிவித்திருந்தார்.

ஃபிட்ஸ் ஏர் (FitsAir) நிறுவனம் விமான சேவையை தொடங்க ஆர்வம் காட்டியுள்ள நிலையில், அரசாங்கம் இதற்கான பதிலை இதுவரை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Von Admin