• Sa. Dez 14th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

இரண்டு பயணிகள் விமானங்கள் மோதல்

Sep 29, 2022

லண்டன் ஹீத்ரோ சர்வதேச விமான நிலையத்தில் இரண்டு பயணிகள் விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதை காட்டும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

Icelandair மற்றும் Koreanair விமானத்திற்கு இடையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. புதன்கிழமை இரவு 8.06 மணிக்கு ஹீத்ரோ விமான நிலையத்தில் இந்த சிறிய விபத்து நடந்ததாகவும் சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பயணிகள் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை
இந்த விபத்தில், பயணிகள் எவருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.மேலும் விமானங்களில் வருகை அல்லது புறப்பாடுகளில் குறிப்பிடத்தக்க தாக்கம் எதுவும் எதிர்பார்க்கப்படவில்லை, ஆனால் பயணிகள் தங்கள் விமானங்களின் நிலையை தங்கள் விமான நிறுவனங்களுடன் சரிபார்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed