ஜெனீவாவில், வெளிநாட்டவர்கள் தேர்தலில் வாக்களிப்பது குறித்து முடிவு செய்வதற்காக வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.

வாக்கெடுப்பில் வெற்றி கிடைக்குமானால், வெளிநாட்டவர்களுக்கு உரிமைகள் வழங்குவதில் ஜெனீவா முன்னிலை வகிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்தலில் வெளிநாட்டவர்கள் வாக்களிப்பது மற்றும் வேட்பாளர்களாக களமிறங்குவது குறித்து முடிவு செய்ய, ஜெனீவாவில் வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.

ஜெனீவாவில் எட்டு ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்துவருபவர்களுக்கு ஜெனீவாவில் வாக்களிக்க உரிமை மற்றும் அவர்கள் வேட்பாளர்களாக போட்டியிட வகை செய்யும் ’இங்கு வாழ்வோருக்கு இங்கு வாக்களிக்கும் உரிமை’ என்னும் பிரேரணை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை வாக்கெடுப்புக்கு விடும் அளவுக்கு, போதுமான கையெழுத்துக்களை தாங்கள் பெற்றுள்ளதாக இந்த திட்டத்தை முன்வைத்தவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

இந்த பிரேரணை வெற்றி பெறுமானால், வெளிநாட்டவர்களுக்கு உரிமைகள் வழங்குவதில் ஜெனீவா முன்னிலை வகிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.  

Von Admin