• Fr. Apr 26th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

சுவிட்சர்லாந்தில் அடுத்த ஆண்டில் காத்திருக்கும் அதிர்ச்சி

Sep 29, 2022

மருத்துவக் காப்பீடு தொடர்பில் அதிர்ச்சியான ஒரு செய்தியை வெளியிட்டுள்ளார் சுவிஸ் சுகாதாரத்துறை அமைச்சர்.

அடுத்த ஆண்டில் மருத்துவக் காப்பீட்டுக்காக மக்கள் கூடுதல் தொகை செலுத்தவேண்டியிருக்கும்.

சுவிட்சர்லாந்து சுகாதாரத்துறை அமைச்சர், மருத்துவக் காப்பீடு தொடர்பில் அதிர்ச்சியான ஒரு செய்தியை வெளியிட்டுள்ளார்.

அது என்னவென்றால், அடுத்த ஆண்டில் மருத்துவக் காப்பீட்டுக்காக மக்கள் கூடுதல் தொகை செலுத்தவேண்டியிருக்கும் என்பதுதான்.

நேற்று Bernஇன் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றில் பேசிய சுவிஸ் சுகாதாரத்துறை அமைச்சரான Alain Berset, பொதுவில் காப்பீட்டு பிரீமியம் 6.6 சதவிகிதம் உயர இருப்பதாக தெரிவித்தார். அதாவது, பொதுவாக 6.6 சதவிகிதம் என்று கூறினாலும், பிரீமியம் தொகை, மாகாணத்துக்கு மாகாணம் மாறுபடும் என்பதுதான் அதன் பொருள்.

இப்போதைக்கு, சராசரியாக ஒருவர் மாதம் ஒன்றிற்கு 313 சுவிஸ் ஃப்ராங்குகள் பிரீமியம் செலுத்துகிறார். அடுத்த ஆண்டு அந்த தொகையைவிட 21 ஃப்ராங்குகள் அதிகம் செலுத்தவேண்டியிருக்கும்.

இந்த கட்டண உயர்வு, எல்லா மாகாணங்களுக்கும் பொருந்தும். அதிகபட்சமாக பேசல் மாகாணத்தில் வாழ்வோர் 426 ஃப்ராங்குகள் செலுத்தவேண்டியிருக்கும்.கோவிட் காலகட்டம்தான் இந்த கட்டண அதிகரிப்பிற்குக் காரணம் என அரசு தெரிவித்துள்ளது.  

உங்கள் நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகிறது

You missed