• Do. Mai 2nd, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

வாக்களித்த தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்

Apr 19, 2024

இந்தியாவின் 18வது ஜனநாயக தேர்தல் திருவிழாவில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் தனது வாக்குப்பதிவை நிறைவு செய்தார்.

இந்தியாவின் 18வது மக்களவை தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது.

துயர்பகிர்தல் இராஜதுரை பொன்னம்பலம் (18.04.2024,சுவிஸ்)

தமிழகத்தில் 39 மக்களவை தொகுதிகளில், 950 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் 874 பேர் ஆண்கள், 76 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  

இன்று தமிழகத்தில் மக்களவை தேர்தலுடன் சேர்த்து விளவங்கோடு சட்டப்பேரவை இடைத் தேர்தலும் நடைபெறுகிறது.

இந்நிலையில், இந்தியாவின் 18வது ஜனநாயக தேர்தல் திருவிழாவில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் தனது வாக்குப்பதிவை நிறைவு செய்தார்.

படப்பிடிப்பிற்காக வெளிநாடு சென்று இருந்ததாக சொல்லப்பட்ட நிலையில், நடிகர் விஜய் சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.

நடிகர் விஜய்யின் வருகையையொட்டி ரசிகர்கள் வாக்குச்சாவடியை பெரும் அளவு சூழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

அத்துடன் நடிகர் விஜய்யின் கையில் ஏற்பட்டுள்ள காயத்திற்கு பேண்டேஜ் ஓட்டிய இருந்த நிலையில், அதை ரசிகர்கள் இணையத்தில் வேகமாக பகிர்ந்து வருகின்றனர். 

20 நிமிடங்களுக்கு முன்பாக வந்து முதல் ஆளாக வாக்களித்த நடிகர் அஜித்

வாக்குப்பதிவு தொடங்குவதற்கு 20 நிமிடங்களுக்கு முன்பே வருகை தந்து நடிகர் அஜித் குமார் வாக்களித்தார்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்களும் காலை முதலே வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்து வருகின்றனர். மேலும் பொதுமக்களும் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.

அந்தவகையில் நடிகர் அஜித் குமார் தனது வாக்கினை செலுத்துவதற்காக வாக்குப்பதிவு தொடங்குவதற்கு 20 20 நிமிடங்களுக்கு முன்பே திருவான்மியூர் வாக்குச்சாவடிக்கு வருகை தந்தார்.

ajithkumar vote

பின்னர், அங்கு காத்திருந்து முதல் ஆளாக தனது வாக்கினை செலுத்தினார். எப்போதும் தனது மனைவி ஷாலினியுடன் வந்து வாக்களிக்கும் நிலையில் இந்த முறை தனியாக வந்து வாக்களித்து சென்றார்.      

வாக்களிக்கவில்லை என்றால் அது மரியாதை இல்லை! நடிகர் ரஜினிகாந்த் பேச்சு

தமிழகத்தில் இன்று வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது வாக்கினை செலுத்தியுள்ளார்.

மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு இன்று நாடு முழுவதும் உள்ள 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளில் நடைபெற்று வருகிறது.

அந்தவகையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அந்தவகையில், நடிகர் ரஜினிகாந்த் காலை 8 மணியளவில் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி வாக்குச்சாவடியில் தன்னுடைய வாக்கினைச் செலுத்தினார்.

actor rajinikanth has voted

அவர் வாக்களிக்க செல்வதற்கு முன்பாக போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், „வாக்குரிமை உள்ள அனைவரும் நிச்சயம் வாக்களிக்க வேண்டும். வாக்களிப்பது தான் மரியாதை மற்றும் கவுரவம். வாக்களிக்கவில்லை என்றால் அது மரியாதை இல்லை, கவுரமும் இல்லை. அதனால் சிந்தித்து வாக்களியுங்கள்“ என்றார்.    

மனசாட்சியோடு வாக்களியுங்கள் – நடிகர் சிவகார்த்திகேயன்

நடிகர் சிவகார்த்திகேயன் வாக்களித்த பின்னர், பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இன்று 7 மணியளவில் இருந்து மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஆரம்பமாகியுள்ளது.

21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களில் வாக்களிப்பு நிகழ்ந்து வருகிறது.

பல திரைப்பிரபலங்களும் தங்களது வாக்களிக்கு உரிமையை விட்டுக்கொடுக்காமல் உரிய இடத்திற்கு சென்று வாக்களித்து வருகின்றனர்.

அந்தவகையில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது மனைவியுடன் சேர்ந்து வாக்களித்துள்ளார்.

வாக்களித்த பின்னர் ஊடகத்திற்கு பேசிய போது, „இளைஞர்களே தேர்தலை திருவிழா போலக் கொண்டாட வேண்டும். வாக்களிப்பது அரைமணி நேரம் தான், 15 நிமிட வேலைதான். அதனால், மனசாட்சியோடு சிந்தித்து வாக்களியுங்கள்.

அந்தவகையில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது மனைவியுடன் சேர்ந்து வாக்களித்துள்ளார்.

வாக்களித்த பின்னர் ஊடகத்திற்கு பேசிய போது, „இளைஞர்களே தேர்தலை திருவிழா போலக் கொண்டாட வேண்டும். வாக்களிப்பது அரைமணி நேரம் தான், 15 நிமிட வேலைதான். அதனால், மனசாட்சியோடு சிந்தித்து வாக்களியுங்கள்.

உங்கள் நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகிறது

You missed