• Di. Mai 14th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

தென்னிந்தியாவில் வரலாறு காணாத தண்ணீர் பஞ்சம்!

Apr 28, 2024

தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய தென்னிந்திய மாநிலங்களில் வரலாறு காணாத அளவிற்கு தண்ணீர் பஞ்சம் ஏற்படும் அபாயம் இருப்பதாக மத்திய நீர் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

தென்னிந்திய மாநிலங்களில் உள்ள நீர் தேக்கங்களில் மொத்த கொள்ளளவில் 17 சதவீதம் மட்டுமே நீர் தற்போது இருப்பதாகவும் இதனால் தண்ணீர் பஞ்சம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது 

உலகின் மிகப்பெரிய விமான நிலையம்! டுபாயில்!

தென்னிந்தியாவில் உள்ள 42 நீர்த்தேக்கங்களில் சராசரி மேற்கொள்ள அளவு 53 பில்லியன் கன அடி என்ற நிலையில் தற்போது 8.865 பில்லியன் கன அடி மட்டுமே காணப்படுவதாகவும் இது மொத்த கொள்ளளவில் 17 சதவீதம் என்றும் மத்திய நீர் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது 

யாழில் காணாமல் போன சிறுவன் பரந்தனில் வைத்து கண்டு பிடிப்பு!

எனவே தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் முன்கூட்டியே முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக்கொள்ள இந்த மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்படுவதாகவும் மத்திய நீர் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது 

காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் நடப்பாண்டு போதிய மழை பெய்யாததால் தான் இந்த பிரச்சனை என்றும் மகாநதி, பெண்ணாறு படுகைகளிலும் நீர் வரத்து குறைந்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சிறுப்பிட்டி மற்றும் உலக வாழ் சிறுப்பிட்டி உறவுகளுக்கு

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed