யாழ்.உரும்பிராய் கிழக்குப் பகுதியில் நேற்று நண்பகல் வீடொன்று உடைக்கப்பட்டு 12 பவுண் நகைகள் கொள்ளையடித்துச் செல்லப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தொியவருகையில், உரும்பிராய்கிழக்குப்பகுதியிலுள்ள வீடொன்றில் சுவிஸ் நாட்டில் இருந்து வருகை தந்த குடும்பத்தினர் தங்கியிருந்துள்ளனர்.

இந்நிலையில் அவர்கள் நேற்று நயினாதீவுக்கு வழிபாடுகளுக்காகச் சென்றவேளை மேற்படி வீடு உடைக்கப்பட்டு நகைகள் திருடப்பட்டுள்ளன.

இதுதொடர்பில் கோப்பாய்பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Von Admin