• Do. Sep 12th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பிரித்தானியாவில் நாளை முதல் அதிகரிக்கப்படவுள்ள கட்டணங்கள்

Sep 30, 2022

பிரித்தானியாவில் நாளை ஒக்டோபர் 1 ஆம் திகதி முதல் மின்சாரம் மற்றும் எரிவாயு உட்பட்ட சக்திவளக் கட்டணங்கள் 27 சதவீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் சாராசரி குடும்பமொன்றின் வருடாந்த எரிசக்தி கட்டணத்தில் உயர்வு ஏற்படவுள்ளது.

பிரித்தானியாவில் இன்றுவரை ஒரு சராசரி குடும்பமொன்றின் வருடாந்த எரிசக்தி கட்டணம் 1,971 ஆக உள்ள நிலையில நாளை முதல் அது ஒரு வருடத்துக்கு 2,500 ஆக உயரவுள்ளது.

உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பின் தாக்கம் ஐரோப்பாவுக்கான ரஷ்ய எரிவாயு விநியோகத்தை குறைத்துள்ளதால் எரிசக்தி செலவுகள் அதிகரித்துள்ளன.

இந்த அதிகரிப்பு இப்போது நேரடியாக பிரித்தானிய வாடிக்கையாளர்களிடம் சுமத்தப்படுவதால் அவர்களும் நாளைமுதல் தாம் பயன்படுத்தும் எரிசக்தி ஆற்றலுக்கு அதிக கட்டணத்தை செலுத்தவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஒரு சாராசரி குடும்பம் ஆண்டொன்றுக்கு 2,500 பவுண்ட்ஸ் செலுத்தவேண்டிவருமென குறிப்பிடும் அரசாங்கம் தமது தரப்பு அதிகபட்சக் கட்டண நிர்ணயத்தை செய்ததால் தான் ஆண்டொன்றுக்கு 3,549 ஆக உயரும் என எதிர்பார்க்கப்பட்ட கட்டணம் தற்போது 2,500 பவுண்ட்ஸுக்குள் உள்ளகப்பட்டுள்ளதாக கூறுகிறது.

ஆனால் இந்த தொகையே மிக அதிகமானதென்பதால் வருவாய் குறைந்த குடும்பங்களுக்கு சிறிய உதவிதொயை அரசாங்கம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நாளை முதல் புதிய கட்டணங்கள் நடைமுறைக்கு வருவதால் இதுவரை பயன்படுத்திய மின்சாரம் மற்றும் எரிவாயு பயன்பாட்டுக்குரிய மானி அளவீடுகளை சமர்ப்பிப்பதன் மூலம், ஒக்டோபர் முதலாம் திகதிக்கு முன்னர் பயன்படுத்தபட்ட ஆற்றலுக்குரிய கட்டணம் ஒக்டோபர் முதலாம் திகதிககு பின்னரான கட்டணத்துடன் தற்செயலாக இணைவதை தடுக்கமுடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed